மாணவி வித்தியா கொலை தொடர்பில் இன்று வெளிவந்த தகவல்

மாணவி வித்தியா கொலை தொடர்பில் இன்று வெளிவந்த தகவல்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் என்பவர் அப்போது காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ஸ்ரீகஜன் என்பவரால் விடுவிக்கப்பட்டார் என தெரியவந்துள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசெர இன்று (14) அரசியல் பழிவாங்கலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்திடம் இந்த உண்மையை வெளியிட்டுள்ளார்.

சுவிஸ் குமாரை தடுத்து வைத்து மருத்துவமனையில் சேர்க்குமாறு முன்னாள் மூத்த டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க பிறப்பித்த உத்தரவை மீறி அவர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகஜன் கட்டளையிட சந்தேக நபரை டி.ஐ.ஜி. லால் குமார கமகே விடுவித்ததாக சிசிர திசெர தெரிவித்தார்.

இந்த வெளிப்பாட்டைத் தொடர்ந்து, சுவிஸ் குமாரை பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தவர் டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க மற்றும் டி.ஐ.ஜி லால் குமார கமகே என்று ஆணையத் தலைவர் தெரிவித்தார்.