கொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

கொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

இங்கிலாந்தில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சொக்லட், சிறார்களுக்கான ஆடைகள் அடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்க திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.

இந்தநிலையில் ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் கைப்பற்றப்பட்ட கொள்கலன் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில், குறித்த கொள்கலனிலிருந்து இருந்து சொக்லட், சிறார்ளுக்கான ஆடை வகைகள், ஜேம் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் தங்கியுள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரினால் கண்டி மற்றும் புத்தளம் பகுதிகளில் உள்ள அதிக சிறார்களை கொண்ட இரண்டு குடும்பங்களுக்கு குறித்த பொருட்கள் அனுப்பபட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.