பொலன்னறுவையில் மாணவனுக்கு கொரோனா - இழுத்து மூடப்பட்டது பாடசாலை

பொலன்னறுவையில் மாணவனுக்கு கொரோனா - இழுத்து மூடப்பட்டது பாடசாலை

பொலன்னறுவை ராஜாங்கன பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் முதலில் அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளியின் வீட்டிற்கு முன்பாக உள்ள இல்லத்தில் வசித்தவரே இவ்வாறு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்

ராஜாங்க பிரதேசத்தில் 102 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 101 பேருக்கு தொற்று உறுதியாகவில்லை என்ற போதிலும் ஒருவருக்கே மேற்படி தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், அவர் தற்சமயம் சிறிசெவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் எனவும் ராஜாங்க பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் சந்தியா அபேரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த மாணவர் கல்விபயிலும் ராஜாங்கன நவோத்தியா பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், ஏனைய பாடசாலைகளின் நிலைமை குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.