அமைச்சு பதவி கிடைத்ததும் சம்பிரதாயங்களை மறந்த இலங்கை அமைச்சர்களால் சர்ச்சை

அமைச்சு பதவி கிடைத்ததும் சம்பிரதாயங்களை மறந்த இலங்கை அமைச்சர்களால் சர்ச்சை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.

கண்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லொஹான் ரத்வத்தே, விமலவீர திஸாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆகிய இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் சென்றுள்ளனர்.

தங்களின் தனிப்பட்ட தேவைக்காக அவசரமாக செல்ல வேண்டும் என கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அங்கிருந்த போதிலும் நெகிழ்ச்சியான சிக்கல் ஒன்றிற்கு மத்தியில் அந்த புகைப்படம் எடுத்துக் கொள்வதனை அவர் புறக்கணித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் புதிய அமைச்சரவையின் போது ஜனாதிபதியுடன், அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது சம்பிரதாயமாகும்.