புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரு சிறுபான்மையின பிரதிநிதிகள்..!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரு சிறுபான்மையின பிரதிநிதிகள்..!

28 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரண்டு சிறுபான்மையின பிரதிநிதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், 39 ராஜாங்க அமைச்சர்களில் இரண்டு சிறுபான்மையின பிரதிநிதிகளுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 28 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மூன்று புதுமுக பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும், நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும நியமிக்கப்பட்டுள்ளனர்.