ராஜபக்சாக்களின் கைகளில் முக்கிய அமைச்சுக்கள்! முழுமையான விபரம்

ராஜபக்சாக்களின் கைகளில் முக்கிய அமைச்சுக்கள்! முழுமையான விபரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். கண்டி தலதா மாளிகையில் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.

இதன்போது, நாமல் ராஜபக்ச இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச - நிதி, புத்தசாசனம், மத விவகாரம், கலாசாரம், நகர அபிவிருத்தி அமைச்சராகவும், சமல் ராஜபக்ச நீர்பாசன அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதுவொருபுறமிருக்க, சமல் ராஜபக்சவின் புதல்வர் சஷிந்திர ராஜபக்ஷ - நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார்.