ஆயிரம் தொன் எண்ணையுடன் விபத்துக்குள்ளான கப்பலினால் இலங்கைக்கும் ஆபத்து

ஆயிரம் தொன் எண்ணையுடன் விபத்துக்குள்ளான கப்பலினால் இலங்கைக்கும் ஆபத்து

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மொரீஷியஸ் தீவிற்கு அருகில் ஆயிரம் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியது.

இதனால் இலங்கை கடல் எல்லை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் எல்லைகளிலும் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்வது அதிகம் என அதன் அதிகாரி பேராசிரியர் டர்னி பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இவ்வாறான விபத்துகள் எற்பட்டால் அது நாட்டின் கடல் எல்லைக்கு அச்சுறுத்தலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் 1,000 தொன் அளவிலான எண்ணெய் கடலில் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய இலங்கை இதனை விடவும் தயாராக இருப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.