தண்டவாளத்தில் சடலம்! ரயில் சேவை நிறுத்தம்

தண்டவாளத்தில் சடலம்! ரயில் சேவை நிறுத்தம்

மாத்தளை – கண்டி நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்ட மற்றும் வத்தேகம பகுதிகளுக்கிடையிலான ரயில் மார்க்கத்தில் சடலமொன்று காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சடலத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதுடன், இது யாருடைய சடலம், கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.