நாடாளுமன்றத்தில் அமரும் முன்னர் உங்கள் சொத்து விபரங்களை கையளியுங்கள்! விசேட அறிவித்தல்

நாடாளுமன்றத்தில் அமரும் முன்னர் உங்கள் சொத்து விபரங்களை கையளியுங்கள்! விசேட அறிவித்தல்

பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை நாடாளுமன்றத்தில் அமரும் முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு, தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல வேட்பாளர்கள் தமது சொத்து விபலங்களை வழங்கியுள்ளதாகவும் சொத்து விபரங்களை வழங்காதவர்கள் அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெறாத வேட்பாளர்களின் சொத்து விபரங்களை பெற்றுக்கொள்ளும் இறுதி தினம் குறித்து பின்னர் அறிவிப்பதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு தமது சொத்து விபரங்களை கையளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.