20 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

20 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 513 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 4 ஆயிரத்து 520 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் அதிகளவான உயிரிழப்புகள் இந்தியாவிலேயே பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 62 ஆயிரத்து 117 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 7 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 28 லட்சத்து 86 ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.