இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை மத்திய வங்கி கடந்த பெப்ரவரி கடைசி வாரம்வரை 450 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது.

இதில் 164.9 பில்லியன் ரூபா மார்சிலும் 92.5 பில்லியன் ரூபா ஏப்ரலிலும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன.

எனினும் இந்த செயற்பாடு விரைவான அபிவிருத்தியையோ அல்லது பணவீக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழமையாக இலங்கை மத்திய வங்கி, தம்மிடம் உள்ள நாணய ஒதுக்கத்தின் அடிப்படைலேயே நாணய தாள்களை அச்சிடப்படும்.

எனினும் இந்த ஒதுக்கம் கடந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில்; 996.5பில்லியன் ரூபாவில் இருந்து 868 பில்லியன்களாக குறைந்தது.

இது ஒரு வருடத்துக்கு முன்னுள்ள ஒதுக்கமான 874.5 பில்லிகள் ரூபாவை விட குறைவானதாகும்.

வணிக வங்கிகள் மத்திய வங்கியில் வைப்பிலிட்ட தொகையில் குறைவு ஏற்பட்டமை காரணமாகவே மத்திய வங்கியின் நாணய ஒதுக்கம் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.