தடை செய்ய டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து

தடை செய்ய டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து

டிக் டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டானட்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை தடை செய்வதற்கான நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

தங்களின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக டிக் டொக்கின் உரிமையாளருக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நிறைவேற்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறைவேற்று ஆணைக்கு அமையஇ 45 நாட்களில் ஆரம்பமாகிஇ பைட் டேன்ஸ் நிறுவனத்துடனான அமெரிக்காவின் எந்தவொரு பரிவர்த்தனையும் தடைசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும்இ தரவுகளை கட்டுப்படுத்தியதாக அல்லது சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துகொண்;டதாக கூறப்படும் குற்றச்சாட்டை டிக் டொக் நிறுவனம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.