சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன்! – பவதாரணி

சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன்! – பவதாரணி

சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன்” என
பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மக்களின் அன்பை பெற்ற நம்பிக்கையை பெற்றவர்களே நாடாளுமன்றம் செல்லவேண்டும். இதனடிப்படையிலேயே தேர்தல் நடாத்தப்படுகின்றது.

ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மாற்ற முனைவது அபத்தமானது. ஆமாம் தமிழரசு கட்சியில் நிகழவுள்ளதாக ஊடகங்களின் மூலமாக அறியக்கூடியதாக உள்ள சசிகலா ரவிராஜிற்கு எதிரான அநீதியை குறிப்பிடுகின்றேன் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் பவதாரணி ராஜசிங்கம்.

இது பெரும் சவாலான விடயம். ஒரு பெண்ணை முன்னிறுத்தி வாக்குகளை சுவீகரித்து அவளை புறந்தள்ளி அவளது இடத்தில் வேறொருவர் வர நினைப்பது சமூக மட்டத்தில் நடக்கும் அநீதியே. இந்த தவறு நிகழ அனுமதித்தால் எங்கேனும் ஒரு இடத்தில் இதன் தொடர் நிகழ்ந்து கொண்டே இருக்க அனுமதித்தவர்களாகி விடுவோம்.

கட்சிபேதங்களை கடந்து பெண்ணாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். அவளுக்கு ஒரு அநீதி எழும்போது அதற்கு எதிராய் குரல் கொடுப்பேன் என உறுதியாய் முடிவெடுத்தவர்கள். விழுது நடாத்திய அவளுக்கு ஒரு வாக்கு நிகழ்வில் கலந்து கொண்ட நான் உட்பட உமா சந்திரபிரகாஷ், மீரா அருள்நேசன், ஞானகுனேஸ்வரி, அனந்தி சசிதரன், அனைவரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி பெண்களுக்கெதிரான அநீதிக்கு குரல் கொடுப்பேன். சசிகலா ரவிராஜ் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அவருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன். கட்சிகளை கடந்து பெண் வேட்பாளர்கள் இணைந்து பயணிக்க வேண்டும் என மற்றவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.-என்றார்.