பொதுத் தேர்தல் 2020 - கட்சிகள் பெற்ற ஆசன விபரம் - ஒரே பார்வையில்!

பொதுத் தேர்தல் 2020 - கட்சிகள் பெற்ற ஆசன விபரம் - ஒரே பார்வையில்!

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன் 29 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் 196 ஆசனங்களையும் 29 போனஸ் ஆசனங்களையும் கட்சிகள் பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 128 ஆசனங்கள் - 17 போனஸ் ஆசனங்கள் = 145 மொத்த ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி - 47 ஆசனங்கள் - 7 போனஸ் ஆசனங்கள் = 54 மொத்த ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி - 9 ஆசனங்கள் - 1 போனஸ் ஆசனம் = 10 மொத்த ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி - 2 ஆசனங்கள் - 1 போனஸ் ஆசனம் = 3 மொத்த ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2 ஆசனங்கள் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 2 மொத்த ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1 ஆசனம் - 1 போனஸ் ஆசனம் = 2 மொத்த ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் - 1 ஆசனம் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1 ஆசனம் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1 ஆசனம் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 ஆசனம் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை =1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 ஆசனம் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி - 1 ஆசனம் - போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

ஐக்கிய தேசிய கட்சி - ஆசனங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை - 1 போனஸ் ஆசனம் = 1 ஆசனம்

அபே ஜன பல கட்சி - ஆசனங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை - 1 போனஸ் ஆசனம் = 1 ஆசனம்