அயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி

அயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி

அயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இராமர் கோயிலுக்கான அடிக்கல்லை இன்று (புதன்கிழமை) நாட்டி வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “உலகம் முழுவதும் இன்று இராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள இராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீராமர்,  சீதா தேவியை நினைவு கூறுவோம்.

ன்னை இந்த விழாவுக்கு அழைத்ததற்கு மனமார்ந்த நன்றி. இராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை நான் எனது வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.  பல தலைமுறைகளாக பலர் இந்த இராமர் கோயிலுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர்.

இராமர் கோயிலுக்காக ஏராளமானோர் போராட்டக் களத்தில் இறங்கினர். இலட்சக்கணக்கானோரின் போராட்டத்தால்தான் இராமர் கோயில் எனும் கனவு இன்று நனவாகியுள்ளது. இராமர் கோயிலுக்காகப் போராடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்