அயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து? இன்று பலப்பரீட்சை!

அயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து? இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் இப்போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அயர்லாந்து அணிக்கு ஹென்ரிவ் பால்பிரையனும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.

ஆகவே இப்போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிபெற்று அயர்லாந்து அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பிலும், அயர்லாந்து அணி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்யும் ஆர்வத்திலும் உள்ளன.