தபால் அலுவலகங்கள் மேலதிகமாக சில மணித்தியாலங்ளுக்கு திறப்பு

தபால் அலுவலகங்கள் மேலதிகமாக சில மணித்தியாலங்ளுக்கு திறப்பு

நாட்டிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக வருகை தரும் அதிகாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்களால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று  இரவு,  8 மணி வரை திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

2020 பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அத்துடன் குறித்த பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.