பிலிப்பைன்ஸில் மீண்டும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை அமுல்படுத்த திட்டம்!

பிலிப்பைன்ஸில் மீண்டும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை அமுல்படுத்த திட்டம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளின் சமீபத்திய உயர்வைச் சமாளிக்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை மீண்டும் அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே இந்த முடிவினை எடுத்துள்ளார்.

இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சில வணிகங்கள் நிறுத்தப்படுதல் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை அடங்கும்.

இந்த கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுமார் 10,000 புதிய சுகாதார ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவதாகவும் அரசாங்கம் கூறுகிறது.

உலகின் கடுமையான மற்றும் மிக நீண்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள் பிலிப்பைன்ஸில் இருந்தபோதிலும், அங்கு தொற்று அதிகரித்து வருகின்றது. ஜூன் மாதத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன