பொதுத்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

பொதுத்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தலுக்காக வாக்களிப்பு நாளை மறுதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன.

அவற்றில் 7 ஆயிரத்து 45 பேர் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

அத்துடன் குறித்த பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயித்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.