தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு விசேட தனிமைப்படுத்தல் மையம்!

தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு விசேட தனிமைப்படுத்தல் மையம்!

எதிர்காலத்தில் தொற்று நோய்களை எதிர்கொள்ளும் வகையில் முழுமையான தனிமைப்படுத்தல் மையமொன்று அமைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைப் போன்ற வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேசிய தொற்று நோய் வைத்தியசாலை இயங்கி வருகின்றது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு முழுமையானதொரு தனிமைப்படுத்தல் மையத்தின் தேவை குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சுகாதார பாதுகாப்பு முறைமைகளை வலுப்படுத்தும் திட்டம் மற்றும் முழுமையான தனிமைப்படுத்தல் மையம் போன்றவை எதிர்காலத்தில் நாட்டில் தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுடன் தனிமைப்படுத்தல் மையம் விரைவில் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.