மேலும் 21 பேர் நேற்று அடையாளம்

மேலும் 21 பேர் நேற்று அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 21 பேர் நேற்று  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.

 

அவர்களில் 883 பேர் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 21 கொரொனா தொற்றுறுதியானவர்களில் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 16 பேரும், கட்டார் மற்றும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய தலா இரண்டு பேரும், பங்களதேஸில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்;டுள்ளது.

 

அதேநேரம், நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த மேலும் 50 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.

 

இதற்கமைய வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் இருந்து 22 பேரும், காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் இருந்து 13 பேரும், மினுவாங்கொடை வைத்திசாலையில் இருந்து 7 பேரும், தேசிய தொற்று நோயியில் நிறுவகத்தில் இருந்து 5 பேரும் இவ்வாறு குணமடைந்து வெளியேறியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

அத்துடன் இரணவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.