தாய்லாந்தில் வேலை பெற்றுத்தருவதாக கூறி நடந்த பணமோசடி அம்பலம்

தாய்லாந்தில் வேலை பெற்றுத்தருவதாக கூறி நடந்த பணமோசடி அம்பலம்

தாய்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இணையத்தில் விளம்பரங்களை வெளியிட்டு பணமோசடி மோசடி செய்தமை தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (எஸ்.எல்.பி.எஃப்.இ) கண்டறிந்துள்ளது.

தாய் பாதுகாப்பு சேவையில் வேலை வாய்ப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டு அந்த வேலைகளுக்கு பணம் செலுத்திய பின்னர், வாக்குறுதியளித்தபடி அவர்களுக்கு வேலைகள் வழங்கப்படவில்லை என்று ஒரு குழுவினர்புகார் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இது குறித்து விசாரித்து, தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு இதுபோன்ற வேலை வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சிஐடிக்கு புகார் அளித்துள்ளது.