இன்று ஆடி அமாவாசை! ஒவ்வொரு இந்துக்களுக்கும் முக்கியமான நாள்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இன்று ஆடி அமாவாசை! ஒவ்வொரு இந்துக்களுக்கும் முக்கியமான நாள்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வருடந்தோறும் எல்லா மாதமும் வருகின்ற அமாவாசை தினங்கள் விசேஷம் என்றாலும் தை, ஆடி, மஹாளய அமாவாசை தினங்கள் கூடுதல் விசேஷமானவை.

ஆடி அமாவாசையன்று செய்கின்ற தர்ப்பணங்களை பித்ருகள் மனதார ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஏனெனில் ஆடி அமாவாசை தினத்தில் தான் அவர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு மீண்டும் கிளம்பிச் செல்கின்ற நாளாக கருதப்படுகிறது.

அமாவாசையில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்வார்கள். இதனால் பூமியில் உருவாகும் காந்த சக்தியால் கடலில் அலைகள் கூட பொங்கி எழும்.

பூமியில் நம்மை பார்க்க வருகின்ற நம் முன்னோர்களின் பசியையும், தாகத்தையும் தீர்ப்பதற்காக நாம் செய்கிற தர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை விரதம் என்பது குறிப்பாக அப்பாவை இழந்தவர்களுக்கான விரதம். விரதம் இருக்க வேண்டியவர்கள் அதிகாலை எழுந்து அவரவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் குளித்து , தர்ப்பணம் செய்தல் வேண்டும்.

அதன் பிறகு கால்நடைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இயன்ற அளவு அன்னதானம் செய்த பின் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று பின் வீட்டிற்கு செல்வது உத்தமம்.

தர்ப்பணம் செய்பவர்களின் வீட்டில் இருக்கும் பெண்கள் காலை விரதம் இருந்து முன்னோர்களுக்கான உணவை சமைத்து படையிலிட்டு முடிந்த அளவு வீட்டில் முதியவர்களை அழைத்து அன்னமிட்ட பின்னரே பசியாற வேண்டும்.

இவ்வாறு செய்வதால் முன்னோர்களின் பசியும் தாகமும் தீர்ந்து நல்லாசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இப்படி செய்வதால் நம் குடும்பத்திற்கு இருக்கும் முன்னோர்களின் சாபங்கள் விலகும் என்பது ஐதீகம். தெரிந்தோ, தெரியாமலோ குடும்பத்தில் சென்ற தலைமுறையில் முன்னோர்களை திருப்திப்படுத்தாமல் இருந்திருந்தாலும் இப்படிச் செய்வதால் அந்த சாபங்கள் விலகிவிடும்.