மக்களுக்கு எதிராக பொலிஸாரின் தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார் மெக்சிகன் மாநில ஆளுநர்

மக்களுக்கு எதிராக பொலிஸாரின் தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார் மெக்சிகன் மாநில ஆளுநர்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக பொலிஸாரின் தாக்குதலுக்கு மெக்சிகன் மாநில ஆளுநர் மன்னிப்பு கோரியுள்ளார். பொலிஸ் காவலில் உள்ள ஒரு மனிதனின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.

குவாடலஜாரா மாநில தலைநகரில் ஜியோவானி லோபஸ் என்ற மனிதனின் மரணம் தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலரை பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜியோஸ்கோவின் மேற்கு பிராந்தியத்தின் ஆளுநரான என்ரிக் அல்பாரோ கூறினார்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை மோதல்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்ட பலரைக் காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், காணாமல் போனவர்களைக் கன்டுபிடிக்க குறித்த தினமே உத்தரவிட்டிருந்ததுடன் அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று சனிக்கிழமை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.