மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

மின்சாரப் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களை அதன் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கம் மற்றும் நிகழ்நிலை (ஒன்லைன்) முறைமையினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்குழு வெளியிட்டுள்ள, 011 2392607 தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும், 077-0126 253 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வட்ஸ்அப், இமோ, மற்றும் வைபர் வழிமுறைகளில் முறைப்பாட்டை முன் வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரையில் 700 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.