அவுஸ்ரேலியாவில் கொவிட்-19 தொற்று பரவலின் முக்கிய மையமாக சிட்னி மாறியுள்ளது!

அவுஸ்ரேலியாவில் கொவிட்-19 தொற்று பரவலின் முக்கிய மையமாக சிட்னி மாறியுள்ளது!

கொரோனா (கொவிட்-19) தொற்று பரவலின், முக்கிய மையமாக சிட்னி மாறியுள்ளதாக அவுஸ்ரேலியா அரசு தெரிவித்துள்ளது.

நியூ சவுல்த் வேல்ஸ் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மெல்பேர்னை தொடர்ந்து தற்போது சிட்னியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் புதிய மையமாக சிட்னி உருவாகி உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நியூ சவுல்த் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா வைரஜட அதிகரித்து வருவதால், இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாகாண அரசுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்துடனான எல்லை திறக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2.25 கோடி மக்கள் தொகை கொண்ட அவுஸ்ரேலியாவில், இதுவரை கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 10,810பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 113பேர் உயிரிழந்துள்ளனர்.