இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தேசத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நேதாஜியின் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட உள்ளது

அவரை கவுரவிக்கும் விதமாக, டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.
 
இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷாவும் உடனிருந்தார்.