யாழில் விபத்து - ஒருவர் படுகாயம்!

யாழில் விபத்து - ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில், இலுப்பையடி சந்தியில் இன்று (06) மதியம் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாலி வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்துடன், நாவலர் வீதியிலிருந்து, பலாலி வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.