முதல் இன்னிங்ஸ் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில்

முதல் இன்னிங்ஸ் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, இன்று தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சற்றுமுன்னர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய பெத்தும் நிச்சங்க 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வீரச்சாமி பெருமாள் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பில் அணியின் தலைவர் பிரத்வைட் 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 49 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது.