தடைகளைத் தகர்த்தெறிந்து யாழ் பல்கலை மாணவர்கள் அஞ்சலி!

தடைகளைத் தகர்த்தெறிந்து யாழ் பல்கலை மாணவர்கள் அஞ்சலி!

தடைகளைத் தகர்த்து யாழ் பல்கலையில் இன்று மாணவர்களால் தேசவிடுதலைக்காக உயிர்கொடுத்த வீரமறவர்களுக்கு நினைவேந்தல் அனுக்ஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், இன்றையதினம் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இந்த அஞ்சலி நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

இதேவேளை மாவீரர் தின ஏற்பாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸாரால் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.