சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்

சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு கட்டுகுருந்த, நாகொட, பிலமினாவத்தை, போம்புவல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயாகல, மக்கொன, பேருவளை, மொரகல்ல, களுவாமோதர, தர்கா டவுன், அளுத்கம மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.