வட்டிக்கு எல்லாம் விடவில்லை... உண்மை இதுதான்! மோசடி புகாரை பற்றி உண்மையை விளக்கிய பிரசன்னா!

வட்டிக்கு எல்லாம் விடவில்லை... உண்மை இதுதான்! மோசடி புகாரை பற்றி உண்மையை விளக்கிய பிரசன்னா!

நடிகை சினேகா சமீபத்தில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்னர், முதலீடு செய்யப்பட்ட கம்பெனி மீது போலீசாரின் முதற்கட்ட விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து, நடிகர் பிரசன்னா தெரிவிக்கையில், ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக நாங்கள் முதலீடு செய்தோம். அதுவும், அவர்கள் கேட்ட தொகையில் இருந்து ஒரு பங்கைதான் கொடுத்தோம். 6 மாதத்திற்கு பின் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து ஒப்பந்தம் போட்டிருந்தோம்.

பின்னர், வங்கியில் இருந்து அந்நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தோம், ஆனால் நாங்கள் எதிர்ப்பார்த்தப்படி இல்லததால் பணத்தை திருப்பி கேட்டோம்.

ஆனால், அவர்கள் தருவதற்கு கால தமதம் ஏற்பட்டத்து. இதனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.