மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் அறிவிப்பு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் அறிவிப்பு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது தேவையற்ற குளப்பநிலைக்கு அப்பால் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் தலையெடுப்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சந்தேகத்தின் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்தில் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் ஒன்றுகூடும் அடிப்படையில் தேவையற்ற நெருக்கடி நிலை ஏற்படுவதாக அவதானிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ( திங்கட்கிழமை) மாத்திரம் சுமார் 3500 பேர் வெரஹர அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும் 1300 பேருக்கு மாத்திரமே நாளாந்தம் சேவைகள் வழங்கப்படுகின்றன.

வெரஹர அலுவலகத்தில் இடம்பெற்ற நெருக்கடி நிலை தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் காரணங்களைக் கோரியுள்ளார்.

வெரஹர அலுவலகத்தின் ஊடாக வானக அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கு அமைவாக நாளாந்த சேவையை வழங்கக்கூடியளவு வரையறுக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன் பயனாளிகளான பொதுமக்களிடம் நாம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரையில் 2020 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன் கீழான மோட்டார் வாகன கட்டளைகள் மூலம் 2020.03.16 தொடக்கம் 2020.06.30 வரையிலான காலப்பகுதியில் செல்லுபடியான காலம் நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக செல்லுபடியான காலம் நிறைவடையும் தினம் தொடக்கம் 06 மாதங்களுக்கு மேலதிக நிவாரண காலம் மற்றும் 2020.07.01 தொடக்கம் 2020.09.30 வரையிலான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக சாரதி அனுமதிப்பத்திரம் நிறைவடையும் தினம் தொடக்கம் 03 மாத நிவாரண காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தேவையான வகையில் தொடர்ந்தும் இந்த காலம் நீடிக்கப்படவேண்டும் என்று அவதானிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
வாகன அனுமதிப்பத்திரத்தை 1 நாள் சேவையின் கீழ் பெற்றுக்கொள்வதற்காக ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுர மாவட்ட அலுவலகங்களின் வசதிக்கு அமைவாக இந்த இடங்களுக்கு செல்ல முடியும்.

பொதுவான சேவையின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஏனைய அனைத்து மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் வசதிகள் மற்றும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிற்றோம்.