களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் 10 மணித்தியால நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் 10 மணித்தியால நீர்வெட்டு

நாளை மறுதினம் காலை 9.00 மணி தொடக்கம் 10 மணித்தியாலங்களுக்கு களுத்துறை பிரதேசத்தில் நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை, வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.