கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் 500 ஐ நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள்

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் 500 ஐ நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள்

இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், கந்தகாடு போதை புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த 492 பேர் இதுவரை கோவிட் -19 தொற்று உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று மாலை தெரிவித்தார்.

இவர்களில் 429 பேர் மறுவாழ்வு பெறும் கைதிகள், 47 பேர் மையத்தின் பணியாளர்கள். மையத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்புள்ள மேலும் 16 நபர்கள் COVID-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ராஜங்கனயா பகுதியைச் சேர்ந்த பல நபர்கள் அடங்குவர் எனவும் அவர் தெரிவித்தார்.