மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக ஆரம்பம்

மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக ஆரம்பம்

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 தொகைக்குட்பட்டு தீவுமுழுவதுமுள்ள 63 மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மூலம் தகைமை உறுதிப்படுத்தப்பட்ட ஏறத்தாள 147,000 வைப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்கத் தேவையான நிதியங்கள், இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்திலிருந்து ஏற்கனவே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2020.07.12ஆம் திகதி வரை 19,279 வைப்பாளர்கள் தமது நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதுடன் அத்தகைய வைப்பாளர்களுக்கு ரூ.5,175,336,249.68 (ஏறத்தாழ ரூ.5.175 பில்லியன்) கொண்ட தொகை கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கணிசமான எண்ணிக்கையான வைப்பாளர்கள் தமது நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மூலம் தகைமை உறுதிப்படுத்தப்பட்ட, இதுவரையில் தமது கொடுப்பனவுகளை சேகரிக்காத அனைத்து வைப்பாளர்களுக்கும் சொல்லப்பட்ட கொடுப்பனவுகளை மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இத்தால் இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

மக்கள் வங்கி: 0112-481594, 0112-481320, 0112-481617, 0112-481703

இலங்கை மத்திய வங்கி: 112-398 788, 112-477 261