மேல் மாகாண சாரதிகளுக்கான ஓர் அறிவிப்பு

மேல் மாகாண சாரதிகளுக்கான ஓர் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் நியமக் காலம் முடிவடைந்த, வாகன வருவாய் உரிமத்தை புதுப்பிக்க சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை, நிறைவுப் பெறும் வாகனங்களுக்கான வருவாய் உரிமங்கள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் நவம்பர் 30 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (13) முதல் www.motortraffic.wp.gov.lk என்ற இணையதளம் மூலம் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் ஒன்லைன் மூலம் வாகன வருவாய் உரிமத்தை புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.