நாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் (அக். 10-1991)

நாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் (அக். 10-1991)

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. வருவாய்கோட்டங்கள்:- நாகப்பட்டினம், மயிலாடுதுறை நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம், குத்தாலம்

 

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வருவாய்கோட்டங்கள்:- நாகப்பட்டினம், மயிலாடுதுறை

 


நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர்,      திருக்குவளை, வேதாரண்யம், குத்தாலம்

நகராட்சிகள்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி

வேதாரண்யம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், கிருஸ்த்துவர்களுடைய பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலும் உள்ளது. பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.