பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேற்றப் பட்டதன் காரணம் வெளியானது.! இதற்காக தான் வெளியேற்றப் பட்டாராம். இது நியாயம் இல்லை தான்.!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேற்றப் பட்டதன் காரணம் வெளியானது.! இதற்காக தான் வெளியேற்றப் பட்டாராம். இது நியாயம் இல்லை தான்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா வெளியேற்றப் பட்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது. கடந்த 3ம் திகதி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 5 ஒரு வாரத்தை கடந்த நிலையில் அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

இம்முறை போட்டியாளர்கள் அனைவரும் நிதானமாக விளையாட ஆரம்பித்துள்ளனர். அபிஷேக் மற்றும் ராஜு தவிர தற்போது கண்டெண்ட் கொடுக்க யாரும் இல்லை, எல்லோரும் கோபமே வராதவர்கள் போல் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் திரு நங்கையான நமீதா மாரிமுத்து தாமரை செல்வியுடன் சண்டை போட்டிருந்தார்.

 

இதற்கான காரணம் தாமரை செல்வி பயன்படுத்திய வார்த்தைகள் தான். இருப்பினும் பின்னர் போட்டியாளர்கள் சமாதான படுத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர். இந்த நிலையில் நமீதாவிற்கு மீண்டும் போட்டியாளர் ஒருவருடன் சண்டை ஏற்பட்ட நிலையில் நமீதா பிக் பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்ததாகவும், பின்னர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகின்றது.இதன் பின்னர் நமீதா மாரிமுத்து வெளியேற்றப் பட்ட நிலையில் பிக் பாஸ் குரல் தான் போட்டியாளர்களிடம் நமீதா வெளியேற்றப் பட்டதாக தெரிவித்துள்ளது. மிக நீண்ட கனவுடன் தனது சக திரு நங்கைகளுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நமீதா வெளியேற்றப் பட்டது மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தும்.!!