அவ சொன்னது எல்லாம் – பிக் பாஸில் கதறிய நமீதாவின் அம்மா மற்றும் அப்பாவின் முதல் பேட்டி.

அவ சொன்னது எல்லாம் – பிக் பாஸில் கதறிய நமீதாவின் அம்மா மற்றும் அப்பாவின் முதல் பேட்டி.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் நாட்கள் போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களையும் கஷ்டங்களையும் சொல்லி வருகிறார்கள். அந்தவகையில் நமிதா மாரிமுத்து அவர்கள் தன் கதையை கூறியிருந்தார். அதில் அவர் கூறியது, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு எதுவும் தெரியவில்லை. அதற்கு பிறகு தான் என் உடம்பில் ஏற்படும் பல மாற்றங்களை உணர்ந்தேன். 10 வயதுக்கு மேல் முகத்தை அழகாக வைக்க வேண்டும் பெண்கள் உடை போட வேண்டும் என்று எனக்குள் தோன்றியது.

எங்கள் வீட்டில் யாருக்காவது குறை இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் சொல்லி கொடுத்தார்களே தவிர ஆனால், அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை பயங்கரமாக அசிங்கப்படுத்தினார்கள். ஒருமுறை என் அம்மாவும் அப்பாவும் எனக்கு சாப்பாடு கொடுத்தார்கள். அதில் என்ன கொடுத்தார்கள் எனக்கு தெரியவில்லை. கண் விழித்து பார்க்கும் போது ஆஸ்பிட்டலில் இருந்தேன். எனக்கு விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள். பல கொடுமைகளை நான் என்னுடைய சிறுவயதில் அனுபவித்திருக்கிறேன். என்னை அடி அடி அடி என்று அடிப்பார்கள். நான் என் வாழ்க்கையில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ரொம்ப பாதிக்கப்பட்டேன் என்று நமிதா கூறியிருந்தார். இதைப் பார்ப்பவர்கள் கண்களும் கண்ணீரில் நிரம்பியது. இந்நிலையில் இதுகுறித்து நமிதாவின் அம்மாவும் அப்பாவும் எமோஷனலாக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்கள். இதையும் பாருங்க : அன்னிக்கி வெங்கடேஷ் நடிச்சப்ப ஒட்டு மொத்த கோலிவுட்டும் கேலி பண்ணீங்களே – ரஜினி,நயன் ஜோடியால் கடுப்பான ரசிகர்கள். அதில் அவர் கூறியது, என் பொண்ண பத்தி எல்லாரும் பேசுறது நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.நேத்து எபிசோடு பாத்துட்டு நான் ரொம்ப அழுந்துவிட்டோம். நமிதா சொன்னது எல்லாமே உண்மையான தான். அவள் சொல்லும் போது இவ்வளவு பண்ணிருக்கேன் என்று நினைத்து கஷ்டமா இருந்தது. நமிதா எனக்கு ஒரே ஒரு பையன். அவள் எங்களுக்கு பையனுக்கு பையன், பெண்ணுக்கு பெண். அவள் நிகழ்ச்சியில் சொன்ன விஷயம் எல்லாம் உண்மை. அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எங்களுடைய குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம். அதனால் எங்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் எங்களை ஒதுக்கி வைத்தார்கள். அதனால் நாங்கள் எப்படியாவது எங்கள் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்களை அணுகினோம். நாங்கள் அவளுக்கு விஷம் கொடுக்கவில்லை. மயக்க மருந்து கொடுத்து ஹாஸ்பிடல் கொண்டு சென்றோம். பையனாக இருந்து பெண்ணாக மாறிய பின் என் மகள் மிக அழகாக இருந்தார். எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஆரம்பத்தில் தான் எங்களுக்கு வருத்தமாக இருந்தது. பிறகு நாங்கள் அவளைப் புரிந்து ஏற்றுக் கொண்டோம். அவள் இப்போது இருக்கும் நிலைமையை நினைத்து எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. மற்ற பெற்றோர்களும் தயவு செய்து நாங்கள் செய்த தவறை செய்யாதீர்கள். இந்த மாதிரி இருக்கும் குழந்தைகளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.