ஸ்கொட்லாந்தில் மருத்துவமனை நோயாளிகளைப் பார்க்க அனுமதி!

ஸ்கொட்லாந்தில் மருத்துவமனை நோயாளிகளைப் பார்க்க அனுமதி!

ஸ்கொட்லாந்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இன்று (திங்கட்கிழமை) முதல் மருத்துவமனை நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும் அவர்கள் கடுமையான பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நோயாளிகளுக்கு ஒரு நியமிக்கப்பட்ட பார்வையாளர் இருக்க முடியும் மற்றும் முன்கூட்டியே பார்வையிட ஒரு நேரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் இன்று முதல் பல முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல்பொருள் அங்காடி பப்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்புற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

உட்புற விருந்தோம்பல் துறையில் மேலும் கட்டுப்பாடுகள் நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் நீக்கப்படும்.