சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா? சிம்புவின் கொரோனா குமார் பாடல்!

சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா? சிம்புவின் கொரோனா குமார் பாடல்!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான ’கொரோனா குமார்’ படத்தில் இடம் பெற்றுள்ள சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா! பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது.

இன்று மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் போட்டியில் மீண்டும் மோதவுள்ள நிலையில் ’சிஎஸ்கே சிங்கங்களா, சிஎஸ்கே செல்லங்களா’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது பொருத்தமானதாக கருதப்படுகிறது.

’சிஎஸ்கே சிங்கங்களா, சிஎஸ்கே செல்லங்களா’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை சிம்பு மற்றும் பூவையார் பாடியுள்ளனர். ஜாவித் ரியாஸ் இசையில், லலித ஆனந்த் பாடல் வரிகளில் உருவாகியுள்ள பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள ’கொரோனா குமார்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிஎஸ்கே ப்ரோமோ பாடலை சிம்பு மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.