ஓசோன் பாதுகாப்பு நாள்: 16-9-1987

ஓசோன் பாதுகாப்பு நாள்: 16-9-1987

உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளி மண்டலப்பகுதி 'ஸ்ட்ரட்ரோ ஸ்பீயர்' என்றழைக்கப்படுகிறது.

 

உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன.

பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளி மண்டலப்பகுதி 'ஸ்ட்ரட்ரோ ஸ்பீயர்' என்றழைக்கப்படுகிறது. இந்த பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது.

 


வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி 'டாப்சன்' அலகினால் அளவிடப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலாக ஓசோன் அளவிடும் பணி பேராசிரியர் ராமநாதன் என்பவரால் 1919-ம் ஆண்டு கொடைக்கானலில் துவக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆய்வுத்துறை ஓசோன் அளவிடும் பணியை ஆரம்பித்தது. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் தேசிய ஓசோன் மையம் இயங்கிவருகின்றது.

ஓசோன் அடர்த்தியை அளவிட உலகெங்கிலும் சுமார் 450 நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் கொடைக்கானல், மவுண்ட் அபு, புதுடெல்லி, ஸ்ரீநகர், அகமதாபாத், வாரணாசி, புனே, நாக்பூர், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது இடங்களில் இந்த நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் புதுடெல்லி, புனே மற்றும் திருவனந்தபுரத்தில் மாதமிருமுறை ஓசோன் சோன்ட் பலூன் பறக்கச் செய்து வளிமண்டலத்தின் செங்குத்தான ஓசோன் மற்றும் வெப்ப வடிவுருவம் அளவிடப்படுகின்றன.

அண்டார்டிகா பனி கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக 300 ஈம நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட்-நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 விழுக்காடு வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே 'ஓசோன் ஓட்டை' என்று அழைக்கப்படுகிறது.