கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு முதல் காரணம் இதுதான். கணவன் மனைவி ஆயுசுக்கும் பிரியாமல் வாழ்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு முதல் காரணம் இதுதான். கணவன் மனைவி ஆயுசுக்கும் பிரியாமல் வாழ்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் இந்த ஒரு காரணத்தினால் தான் கணவன் மனைவிக்குள் சண்டையே வருகின்றது. அது என்ன காரணம் என்று குறிப்பாக மனைவிமார்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மனைவிமார்கள் செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய தவறு என்ன என்பதைப் பற்றியும், கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் நிறைய பேர் வீடுகளில் சில மனைவிமார்கள் செய்யக்கூடிய தவறைப் பற்றி இன்று நாம் தெரிந்துகொள்வோம். கணவர் செய்யக்கூடிய விஷயம், மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே அதை வெளிப்படையாக சொல்லி விட வேண்டும். ஆனால் சில மனைவிமார்கள் இதை வெளிப்படையாக செய்வதே கிடையாது. சில விஷயங்களை பெண்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதை சகித்துக்கொண்டு ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். தன்னுடைய கணவர் செய்யக் கூடிய அந்த தவறினை அந்த நேரத்தில் அப்போதே தட்டிக் கேட்க மாட்டார்கள். அப்படியே விட்டு விடுவார்கள். மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பார்கள். என்றாவது ஒருநாள், பிரச்சனை பெரிதாகி விடும். அந்த பெரிய பிரச்சனை வரும்போது, ‘போன வருடம் இந்த பிரச்சனை நடந்தது, போன வருடம், இந்த நேரம் இந்த தேதியில் நான் உனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்தேன், நான் உனக்காக எவ்வளவு தியாகம் செய்தேன்’ என்று, தன்னுடைய தியாகத்தை சொல்லி அழுது புலம்புவார்கள். ஒரு பிரச்சனை என்று வரும்போது அந்த சமயத்திலேயே உங்களுடைய கோபதாபங்களை வெளிக்காட்டி விடுங்கள். மொத்தமாக மனதில் போட்டு புழுங்கிக் கொண்டு, ஒருநாள் பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போது, விளைவுகளும் பெரியதாக தான் இருக்கும். அப்பப்போ சின்ன சின்ன சண்டைகள் கணவன்-மனைவிக்குள் வருவது இயல்புதான். அது அப்பவே சரியாகிவிட வேண்டும். மனைவிமார்கள் மொத்த பிரச்சனையையும் மனதில் போட்டு புதைத்து, குழப்பிக் கொள்வதாலேயே நிறைய குடும்பத்தில் பிரிவினை ஏற்படுகிறது. இந்த தவறை செய்யும் பெண்களாக நீங்கள் இருந்தால் இன்றிலிருந்து இந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய இல்லற வாழ்க்கை நிச்சயம் இனிமையாக மாறும். அடுத்தபடியாக கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ ஒரு தார்மீக ரீதியான பரிகாரத்தை பற்றி பார்த்துவிடுவோம். ஒரு சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு உப்பை பரப்பி வைத்து கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை நான்கு பாகங்களாக வெட்டி பிரித்து, அந்த உப்பின் மேலே வைத்து, வெட்டிய எலுமிச்சம்பழத்திற்கு உள்ளே உப்பை வைத்து நிரப்பி விடுங்கள். (பிளாஸ்டிக் கிண்ணத்தின் உள்ளே உப்பு. உப்புக்கு மேலே வெட்டிய எலுமிச்சம்பழம். எலுமிச்சம் பழத்திற்கு உள்ளேயும் உப்பு, அவ்வளவு தான்.) இந்த கிண்ணத்தை அப்படியே எடுத்து படுக்கையறையில் கணவன் மனைவி உறங்கும் கட்டிலுக்கு அடியில் வைத்து விட வேண்டும்.

கட்டில் இல்லாதவர்கள் தலைப்பகுதியில் ஒரு ஓரமாக இந்த பிளாஸ்டிக் பவுலை வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் முதலில் இந்த கிண்ணத்தை அப்படியே எடுத்து கணவன் மனைவி இரண்டு பேருடைய தலையையும் சுற்றி, அப்படியே ஒரு கவரில் உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் கொட்டி, அந்த கவரை அப்படியே சுருட்டி கொண்டு போய் கண்ணுக்கு தெரியாமல் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு வந்துவிட வேண்டும். உங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி கொண்டு போய் குப்பையில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். இப்படி செய்தால் அடிக்கடி சண்டை வரக்கூடிய கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் குறையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.