பிரேசிலிடமிருந்து உருகுவே விடுதலை (25-8-1825)

பிரேசிலிடமிருந்து உருகுவே விடுதலை (25-8-1825)

உருகுவை அல்லது உருகுவே தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜெண்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு. உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு பறவைகளின் ஆறு என்று பொருள். 16-ம்

 

உருகுவை அல்லது உருகுவே தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜெண்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு.

உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு பறவைகளின் ஆறு என்று பொருள். 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன.

 


காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. பொய்னஸ் ஏரிஸ்வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ ராணுவ மையமாகவும் செயல்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன.

பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25, 1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கையின் மூலம் 1828-ம் ஆண்டு விடுதலை அடைந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803- யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.

* 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.

* 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

* 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13-ல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

* 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

* 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.

* 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.

* 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகஅருகில் சென்றது.

* 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் அருகில் சென்றது.

* 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.

* 2003 - மும்பையில் நடைபெற்ற இரண்டு கார் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

* 2007 - ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

* 2007- கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறந்த நாள்

* 1929 - எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி

* 1962 - தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்

* 1952 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

இறந்த நாள்

* 1822 - வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)

* 1867 - மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)

* 1908 - ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)

* 1976 - எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)

* 2007 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி

* 2008 - தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)

* 2009 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)

* 2012 - நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் (பி. 1930)