ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் (24-8-1875)

ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் கேப்டன் மேத்யூ வெப் நீந்திக் கடந்தார் (24-8-1875)

அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆங்கிலக் கால்வாய் ஆகும். வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் இந்த கால்வாய், சுமார் 562 கிலோ மீட்டர் நீளமும் 240 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இவ்வளவு பெரிய கால்வாயை எந்த செயற்கை கருவிகளின் உதவியும் இன்றி, கேப்டன் மேத்யூ வெப் என்பவர், நீந்தி கடக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், 1875-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம்

 

அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆங்கிலக் கால்வாய் ஆகும். வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் இந்த கால்வாய், சுமார் 562 கிலோ மீட்டர் நீளமும் 240 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.

இவ்வளவு பெரிய கால்வாயை எந்த செயற்கை கருவிகளின் உதவியும் இன்றி, கேப்டன் மேத்யூ வெப் என்பவர், நீந்தி கடக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், 1875-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார். டோவரில் இருந்து கலாயிஸ் வரையிலான சுமார் 64 தூரத்தை 21 மணி 45 நிமிடங்களில் கடந்தார். மறுநாள் அதாவது ஆகஸ்ட் 25-ம் தேதி தனது வெற்றிப் பயணத்தை முடித்த அவர், ஆங்கில கால்வாயை கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை பதிவு செய்தார்.

 


1848ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி பிறந்த மேத்யூ வெப், 1873ல் ‘எமரால்டு’ என்ற நீராவிக்கப்பலின் கேப்டனாக பணியாற்றினார். அப்போது ஆங்கில கால்வாயை கடக்கும் ஜே.பி.ஜான்சனின் முயற்சி தோல்வியடைந்தது பற்றி படித்தார். அதன்பின்னர் தானும் அந்த முயற்சியில் இறங்க வேண்டும் என்று தீவிர பயிற்சி செய்தார்.

1875-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, அவர் கால்வாயை நீந்தி கடக்க முயன்றார். ஆனால், கடுமையாக காற்று வீசியதாலும், அலைகள் கடும் சீற்றத்துடன் இருந்ததாலும் அவர் தனது முயற்சியை கைவிட்டார். பின்னர் 24-ம் தேதி தனது இலக்கை எட்டினார்.