பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது (21-8-1821)

பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது (21-8-1821)

ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது. இத்தீவு, தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது. 1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற

ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது.  இத்தீவு, தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது.

1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் இந்த தீவினைக் கண்டுபிடித்தனர். ஆளில்லா இந்த தீவு, குவானோ தீவுகள் சட்டப்படி தங்களுக்கே சொந்தம் என்று 1857-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. அதன்பின்னர் 1858ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முறைப்படி அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.


இதேபோல் ஆகஸ்ட் 21-ம் தேதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் வருமாறு:-

1770 - ஜேம்ஸ் குக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பிரிட்டனுக்கு சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

1831 - கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.

1863 - அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லாரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

1920 - இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாக சேர் ஏ. கனகசபை தேர்வு செய்யப்பட்டார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.

1963 - தெற்கு வியட்நாமின் குடியரசு ராணுவத்தினர் நாட்டின் புத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1968 - சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.

1983 - பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 - கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1991 - லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 - சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

2007 - சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

1906 - பொதுவுடமைவாதி ப.ஜீவானந்தம் பிறந்தநாள்.

1986 - ஜமேக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய சாம்பியன் உசேன் போல்ட் பிறந்தநாள்.

1995 - நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல்-இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் இறந்த நாள்.