2 லிட்டர் சோடாவை 18.45 நொடியில் குடித்து யூடிபர்... வியந்து போன கின்னஸ் சாதனை குழு

2 லிட்டர் சோடாவை 18.45 நொடியில் குடித்து யூடிபர்... வியந்து போன கின்னஸ் சாதனை குழு

யூடியூபர் ஒருவர் 2 லிட்டர் சோடாவை 18.45 நொடியில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் எரிக் பேட்லேண்ட்ஸ் ப்ரூக்கர், இவர் ரேப் பாடகர், யூடியூபர் என பல விதமான திறமைகளை கொண்டவர்.

அமெரிக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் பாடல் பாடி வீடியோ வெளியிடுவது, இவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வீ லாக் எடுத்து வீடியோ வெளியிடுவது என தொடர்ந்து இந்நிலையில் இவர் சமீபத்தில் நியூயார்க் நகரில் செல்டம் என்ற பகுதியில் சுகர் ஃப்ரீ சோடாவை வாங்கி அதை ஒரு 2 லிட்டர் எடுத்துக்கொண்டார்.

அது 2 லிட்டர் தான் என்ற ப்ரூப்பிற்கு அதை சரியாக அளக்கும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் எடுத்துக்கொண்டார்.

இந்த சோடாவை அவர் வெறும் 18.45 நொடிகளில் குடித்து முடித்துவிட்டார். இதை அவர் தனது மனைவி மகன் ஆகியோரை சாட்சியாக வைத்து கேமராவில் வீடியோ பதிவு செய்த படி இதை செய்துள்ளார். கடந்த மே மாதம் அவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த வீடியோவை அவர் யூடியூபில் பதிவேற்றிய நிலையில் அந்த வீடியோவிற்கு பயங்கரமான வரவேற்ப்பு கிடைத்தது.பலர் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த செய்தி கின்னஸ் சாதனை குழுவினருக்கு தெரிந்ததும். அவர் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் அவர் உண்மையிலேயே இந்த சோடாவை 18.45 நொடியில் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இதை கின்னஸ் சாதனையாக பதிவு செய்து கொண்டனர்.