ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 67 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரேதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்த மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட சிலரும்,  குற்றத்தடுப்பு விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்ட காலம் தொடக்கம் பொதுமக்கள், தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் அவசியம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தின் சமூக பாதுகாப்பு பொலிஸ் பிரிவினரால் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்தும் பொதுமக்களுக்கு அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றோம். இவற்றுக்கு மேலாக பள்ளிவாசல்கள், கோயில்கள் ஊடாகவும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.