மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இடம்பெறாத ஸ்டூவர்ட் பிரோட் கோபம்!

மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இடம்பெறாத ஸ்டூவர்ட் பிரோட் கோபம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியில் இடம்பெறாததால், மிகவும் கோபம் அடைந்துள்ளதாக அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிரோட் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, தற்போது, சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்தபோட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிரோட், அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”நான் மிகவும் விரக்கியடைந்தேன், கோபம் அடைந்தேன். ஏனென்றால் அணியில் இருந்து நீக்கியதை புரிந்து கொள்வது மிகவும் கடினமான முடிவு. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நான் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறேன். ஆஷஸ் வெற்றி, தென்னாபிரிக்கா தொடர் வெற்றியை என்னுடைய சட்டை போன்று உணர்கிறேன்”என கூறினார்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில், ஜேம்ஸ் எண்டர்சன், மார்க் வுட், ஜொஃப்ரா ஆர்சர் ஆகியோர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.